1. உபவாச ஜெபக் கூட்டம் :
சில வகைப் பேய்கள், நோன்பாலும், ஜெபத்தாலும் அன்றி ஓடாது, என்று இயேசு கூறினார் - மாற் 9:29. பர்னபாவும், பவுலும், திருப்பணிக்கு அமர்த்தப்பட்ட போது, திருச்சபை நோன்பிருந்து ஜெபித்தது - தி.ப 13:3. பவுல் திருப்பணியாளர்களை நியமித்த போது, நோன்பிருந்து ஜெபித்தார் - தி.ப 14:23. ஆதி ஆவிக்குரிய திருச்சபைகளில், விசுவாசிகள் நோன்பிருந்து ஜெபிக்குமாறு, ஒரு குறிப்பிட்ட காலம் இருந்தது - தி.ப 27:9. விசுவாசிகள், நோன்பிருந்து ஜெபிக்கும் போது, என்னென்ன கடைபிடிக்க வேண்டுமென்று, பவுல், கொரிந்து திருச்சபைக்கு கூறினார் - 1கொரி 7:15.
உலகம், பிசாசு, சரீரத்தோடு போராடிக்கொண்டிருக்கிற, விசுவாசிகளுடைய வாழ்வில், நோன்பிருந்து ஜெபிப்பது, அதிக இறை ஆற்றலை பெற்றுத் தருகின்றது. எனவே, ENJC சபையில் கூடி, உபவாசத்தோடு ஜெபிக்கிறோம். இதனால், விசுவாசப் போராட்டத்தில் உறுதியையும், திடத்தையும், வெற்றியையும், விசுவாசிகள் பெற்றுக் கொள்கிறார்கள்.
உபவாச ஜெப நாள் :பிரதி செவ்வாய்
ஜெப நேரம் காலை: 11 - பிற்பகல் 1.30 மணி.
2. விடுதலை ஆராதனைகள் :
எல்லா நோய்களையும், உன்னிடமிருந்து அகலும்படி செய்வேன் என்று, கடவுள் வாக்களித்தார் - இ.ச 7:15. மனுக்குலத்தை மீட்க வந்த இயேசு, தம் மீட்பின் ஊழியத்தை, விடுதலை அளிக்கும் ஊழியத்தோடு ஆரம்பித்தார் - மத் 4:24. ஆதி ஆவிக்குரிய சபையிலும், விடுதலை அளிக்கும் ஊழியத்தை, திருத்தூதர்கள், தொடர்ந்து செய்து வந்தார்கள். பேதுரு நடந்து செல்லும் போது, அவர் நிழல், சிலர் மேலாவது படுமாறு, மக்கள், உடல் நலமற்றோரை, கட்டில்களிலும், படுக்கைகளிலும், கடத்தி, சுமந்து கொண்டு வந்து, வீதிகளில் வைத்தார்கள். எருசலேமை சுற்றியிருந்த, நகரங்களிலிருந்து, மக்கள் உடல் நலமற்றோரையும், தீய ஆவிகளால் இன்னலுற்றோரையும், சுமந்து கொண்டு திரளாக வந்தார்கள். அவர்கள் அனைவரும், நலம் பெற்றனர் - தி.ப 5:15,16.
எனவே, மீட்பின் ஊழியத்தை செய்யும், ENJC சபையும், தம் ஊழியத்தில், விடுதலை அளிக்கும் ஊழியத்துக்கு, ஒரு முக்கிய இடம் தருகிறது. சபையில், வாரத்துக்கு ஒருமுறை நடைபெறும், குணமளிக்கும் விடுதலை ஆராதனையில், மக்கள், உடல் நலத்தோடு, மன நலமும் பெற்று, விடுதலை அடைகிறார்கள்.
விடுதலை ஆராதனை நாள்:பிரதி ஞாயிறு
விடுதலை
ஆராதனை நேரம்:மாலை 6 - இரவு 8.30
நிகழ்ச்சி விபரம்
1. ஸ்தோத்திரம் செலுத்துதல்
2. பாடல் ஆராதனை
3. துதி செலுத்துதல்
4. அந்நிய பக்ஷேயில் பேசுதல்
5. இறை வார்த்தை (பைபிள் வாசிப்பு)
6. பாடல் ஆராதனை
7. தீர்க்கதரிசன வார்த்தை
8. நன்றி செலுத்துதல்
9. தனி ஜெபம்
10. உணவு விருந்து

No comments: